பெண்களுக்கு இலவச ஆடை அணிகலன் தயாரித்தல் பயிற்சி : பெரம்பலூர் ஐ.ஓ.பி வங்கி அறிவிப்பு

schedule
2020-11-04 | 16:08h
update
2020-11-04 | 16:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Free Apparel Making Training for Women: Perambalur IOP Bank Announcement

பெரம்பலூர் மதன கோபாலபுரத்தில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் பெண்களுக்கான ஆடை அணிகலன் தயாரித்தல் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 நாட்கள் நடக்கும் இப்பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

Advertisement

இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும், இப்பயிற்சியில் சேர 18 வயது முதல் 45 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து நவம்பர் 10 ஆம் தேதி நடக்கவிருக்கும் நேர்முக தேர்வு மற்றும் நுழைவு தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் 04328-277896 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 01:59:33
Privacy-Data & cookie usage: