பெரம்பலூர் மாவட்ட பெண்களுக்கு இலவச அழகு கலை பயிற்சி !

schedule
2022-04-06 | 20:44h
update
2026-06-08 | 17:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Free beautician training for women of Perambalur district!

பெரம்பலூர் மதன கோபாலபுரத்தில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் பெண்களுக்கான அழகு கலை பயிற்சி இலவசமாக வரும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் அளிக்கப்பட இருக்கின்றது.

இப்பயிற்சியில் பாடி மசாஜ் , ஹேர்கட் , பிளீச் பேஸ் , ப்ரென்ச் மெனி குர் , பெடி குர் , கால்வானிக் , ஃ பேசியல் , ஹேர் ஸ்டைல் மெனி குர், மற்றும் பெடி குர், தெர்மோ, ஃ பேசியல் ஹெர்ப் , திரெடிங் / ஐ ப்ரோ , வாக்சிங் , ஸ்கின் டைட்டனிங் ஃ பேசியல் ஹெர்பல் , ஃ ப் ரூட்ஸ் / வெஜிடபிள் ஃ பேசியல், அரோமா தெரபி , ஆகியன பற்றி சிறந்த வல்லுநர்களால் கற்று தரப்பட இருக்கின்றது.

காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இப்பயிற்சி 30 நாட்கள் நடக்கும். காலை, மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.

Advertisement

இப்பயிற்சியில்சேர 19 – 45 வயதுக்குபட்ட, எழுத படிக்கத் தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மேலும், வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் (PIP) அல்லது AAY – குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை அட்டை, வங்கி கணக்கு புத்தகம் உள்ள கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் சங்குப்பேட்டையில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள ஐ.ஓ.பி கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.

குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து ஏப்ரல் 8 ஆம் தேதி நடக்கவிருக்கும் நேர்முக தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும், என தெரிவிக்கப்பபட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.06.2026 - 17:56:25
Privacy-Data & cookie usage: