பெரம்பலூர் மாவட்ட கிராம பெண்களுக்கு இலவச அழகு கலைப் பயிற்சி!

schedule
2024-04-26 | 17:51h
update
2024-04-26 | 17:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Free Beauty Art Training for Village Women of Perambalur District!

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் அழகு கலை பயிற்சி இலவசமாக வரும் 06.05.2024ஆம் தேதி முதல் அளிக்கப்பட இருக்கின்றது. மேலும் இப்பயிற்சியில் ஃபேசியல்,பிளீச்,பெடிக்யூர், மெனிக்யூர், புருவ முடி திருத்தம், மணப்பெண் அலங்காரம், மெஹந்தி, ஹேர் கட், ஹேர் ஸ்பா, ஹேர் கலரிங், மேலும் பல அழகு கலை சம்பந்தமாக விரிவாகவும் நேர்த்தியுடனும் சிறந்த வல்லுநர்கள் மூலம் கற்றுதரப்பட இருக்கின்றது

Advertisement

பயிற்சியின் காலஅளவு 30 நாட்கள் பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை. பயிற்சி காலத்தில் மதிய உணவு மற்றும் காலை, மாலை தேனீர் வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும். வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.

பயிற்சியில் சேர 19 வயது முதல் 45 வயதுக்குபட்ட எழுத படிக்கதெரிந்த,சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மேலும் வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் (PIP) அல்லது AAY – குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை அட்டை உள்ள கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு, நூறு நாள் வேலை அட்டை வங்கி கணக்கு புத்தகம் , பான் கார்டு (PAN Card) ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து மே-4-ஆம் தேதி நடக்கவிருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கு பெற்ற பின் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.08.2026 - 07:17:43
Privacy-Data & cookie usage: