Free bone strength detection camp at Ramanathapuram Sugam Hospital

ராமநாதபுரத்தில் சுகம் வைத்தியசாலை மற்றும் குஜராத் வதோதரா வாசு ஹெல்த் கேர் இணைந்து இலவச எலும்பு வலிமை கண்டறியும் பரிசோதனை முகாம் நடத்தினர்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான் சுகம் வைத்தியசாலையில் ஆஸ்டியோபோரோஸிஸ் எனப்படும் எலும்பின் வலிமை இழக்கும் நோய் கண்டறியும் முகாம் டாக்டர் காளிமுத்து தலைமையில் நடந்தது.

முகாமில் ஆண், பெண் இருபாலருக்கும் கை கால்களில் நீண்டநாட்களாக வலியுடையவர்கள், புகை மற்றும் மதுபழக்கம் உள்ளவர்கள், முட்டு நோய் உள்ளவர்கள், வாத நோய் உள்ளவர்கள், அடிக்கடி எலும்பு முறிவு உள்ளவர்கள் இம்முகாமில் பங்கேற்று எலும்பின் நிலை அறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை பெற்றனர்.

டாக்டர் காளிமுத்து தெரிவித்தாதவது: பொதுவாக முதியோரை தாக்கும் முக்கிய நோய் எலும்பு தொடர்பானது. வயதானால் முதலில் முந்திக்கொண்டு வருவது முட்டுதேய்மானம், முழங்கால் எலும்பு அழற்சி. எலும்புகளின் இணைப்பில் ஏற்படும் வலி ஆகியவைதான்.

90 சதவீதத்தினருக்கு எலும்பு தொடர்பான பிரச்னைகள் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவருகிறது. எலும்பு பிரச்னை ஏற்படாமல் இருக்க எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி அவசியம் தேவை.

கால்சியம் மாத்திரை சாப்பிட்டாலும் அதை கிரகிக்க இளஞ்சுரிய ஒளி உடலில் படும்படி இருப்பது நல்லது. எனவே வாரத்திற்கு ஐந்து நாட்கள் 30 நிமிடங்கள் வீதம் மிதமான சுரிய ஒளியில் கட்டாயம் நடைபயிற்சி செய்ய வேண்டும். தினசரி பால் அருந்த வேண்டும். ஆண், பெண் இருபாலரும் பிஎம்டி எனப்படும் போன் மினரல் டென்சிட்டி பரிசோதனை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மேற்கொள்ள வேண்டும்.

ஆர்தரைடிஸ் ஆஸ்டியோபோரோசிஸ்க்கு சிகிச்சை அளிக்க பல நவீன மருந்துகள் கிடைக்கின்றன. எனினும் ஆற்றல் மிக்க பாதுகாப்பான ஆயுர்வேத மருந்துகளும் கிடைக்கின்றன. இதுபோன்ற கோளாறுகளுக்கு நீண்டகாலம் மருந்துகள் எடுக்கப்பட வேண்டும் என்பதால் சிகிச்சையில் வழங்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதை சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் தருகிறது, என தெரிவித்தார்.

முகாமில் வாசு ஹெல்த் கேர் நிறுவனத்தின் மருத்துவ முகாம் நிர்வாகி சிசாத், மேலாளர் சங்கர், இபுராகிம் ஆகியோர் பங்கேற்று நோயாளிகளுக்கு கால்களில் உள்ள கால்சியம் அளவு குறித்து நவீன கருவிகளின் உதவியும் பரிசோதனை செய்தனர்.

முகாமில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர். மர்ம வைத்தியர் முர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் எலும்பு வலிநீக்கும் முலிகை கசாயம் இலவசமாக வழங்கப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!