பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு மெழுகுவர்த்தி தயாரிக்கும் இலவச பயிற்சி!

schedule
2022-08-04 | 22:08h
update
2026-06-11 | 15:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Free candle making training for the people of Perambalur district!

பெரம்பலூர் மதன கோபாலபுரத்தில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் ஆண் மற்றும் பெண்களுக்கு மெழுகுவர்த்தி தயாரித்தல் தொழிற்பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.

பயிற்சி காலை 9.30 முதல் மாலை 5.30 மணி நடக்கும் இப் பயிற்சி 10 நாட்கள் நடக்கும். அப்போது, காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

Advertisement

இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும், இப்பயிற்சியில் சேர 19 – 45 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். கிராமப்புற ஆண் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை, வங்கி புத்தகம், ஆகியவற்றின் நகல் ( 2 செட்) , பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 3 ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடக்கவிருக்கும் நேர்முக தேர்வில் பங்கு பெறுபவர்களை பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு நேரில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்:

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.06.2026 - 15:14:24
Privacy-Data & cookie usage: