“ இலவச சி.சி.டிவி கேமரா பொருத்துதல் மற்றும் தொழிற்பயிற்சி” : பெரம்பலூர் ஐ.ஓ,பி அறிவிப்பு!

schedule
2020-09-26 | 03:35h
update
2020-09-26 | 03:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

“Free CCTV Camera Fitting and Vocational Training”: Perambalur IOB Announcement!

பெரம்பலூர் சங்குப்பேட்டையில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் குறுகிய கால சி.சி.டிவி கேமரா பொருத்துதல் மற்றும் சேவை பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது

Advertisement

பயிற்சியின் 13 நாட்கள் வழங்கப்படும். காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும், பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும், இப்பயிற்சியில் சேர 18 வயது முதல் 45 வயதுக்குபட்ட,எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பயிற்சியில் சேர விரும்புவோர் வருகிற அக்டோபர் 5ம் தேதிக்குள் முன்பதிவு செய்துக்கொள்ளவும். இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், சங்கு பேட்டை,பெரம்பலூர்-621212 என்ற முகவரியிலோ அல்லது 04328-277896, என்ற எண்ணிலோ தொடர்புகொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 06:09:34
Privacy-Data & cookie usage: