பெரம்பலூர் மாவட்ட இளைஞர்களுக்கு இலவச செல்போன் பழுதுநீக்கும் தொழிற்பயிற்சி

schedule
2022-06-28 | 15:22h
update
2022-06-28 | 15:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Free Cellphone Repair Training for Perambalur District Youth

பெரம்பலூர் ஐஓபி வங்கியின், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் செல்போன் பழுதுநீக்குதல் மற்றும் சேவை தொழிற்பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது

Advertisement

30 நடக்கும் இப்பயிற்சி, காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கும், பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும். வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும், இப்பயிற்சியில் சேர 19 – 45 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டை, ஆதார் கார்டு பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை, வங்கி புத்தகம் ஆகியவற்றின் நகல் 2 , பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 3 ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து ஜுன் 30ஆம் தேதி நடக்கவிருக்கும் நுழைவு தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம் வேலை நாட்களில் நேரடியாக தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 23:26:31
Privacy-Data & cookie usage: