2ம் நிலைக் காவலர், குரூப் 1 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் : பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தகவல்!

schedule
2022-07-27 | 22:22h
update
2026-06-17 | 06:40h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Free Coaching Classes for Police Constable and Group 1 Exam : Perambalur District Employment Officer Information.

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின், தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது? தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடத்திற்கும், IBPS பணியிடத்திற்கும், குரூப் 1-க்கான இலவச பயிற்சி வகுப்புகள் 03.08.2022 அன்று தொடங்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://docs.google.com/spreadsheets/d/1-awvRlqTTZQGRvSduGzfaVHMIDQNXXlDXS6jBdBQp5w/edit?usp=sharing இந்த Google Sheet Link-ல் தங்களுடைய விவரங்கள் 02.08.2022க்குள் உள்ளீடு செய்யப்பட வேண்டும்.

Advertisement

இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய பணியிடத்திற்கு விண்ணப்பித்த நகல், ஆதார் அட்டை, புகைப்படங்களுடன் நேரில் வருகை புரியும் போது வழங்கப்பட வேண்டும் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 06:40:46
Privacy-Data & cookie usage: