மத்திய பணியாளர்கள் தேர்வாணைய தேர்விற்கு இலவச பயிற்சி: பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2023-04-15 | 18:58h
update
2023-04-15 | 18:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Free Coaching for Central Staff Selection Board Exam : Perambalur Collector Information!
பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் (Staff Selection Commission, Government of India) “ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு – 2023 (Combined Graduate Level Examination, 2023)” தொடர்பான அறிவிப்பினை 03.04.2023 அன்று வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள் / சட்டப்பூர்வ அமைப்புகள்/ தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் “B” மற்றும் குரூப் “C” நிலையில், 7,500-க்கும் மேற்பட்ட பணி காலியிடங்கள் அறிவித்துள்ளது. இத்தேர்வில் நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்தவேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் (Recruitment Notice) விரிவாக வழங்கப்பட்டுள்ளது. மேலும்,இவ்விவரங்கள்https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/noticeCGLE03042023.pdf என்ற இணையதள முகவரியிலும் உள்ளது.

இப்பணிக்காலியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணையவழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 03.05.2023 மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 04.05.2023 ஆகும்.

தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு, ஜூலை 2023ல் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 10 மையங்களில், புதுச்சேரியில் 01 மையத்திலும், தமிழ்நாட்டில் 07 மையங்களில், தெலுங்கானா மாநிலத்தில் 03 மையங்களில் ஆக மொத்தம் 21 மையங்கள் / நகரங்களில் நடைபெற உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான (Staff Selection Commission Exam – CGL) கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன. இத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் (https://tamilnaducareerservices.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இவ்விணையதளத்தில் ‘TN Career Services Employment’ மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் ‘AIM TN’ என்ற YouTube Channel-களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இத்தேர்வுக்கான காணொளிகளை கண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே, இத் தேர்வுக்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உரிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு தெரிவித்துள்ளார்கள்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.08.2026 - 13:30:09
Privacy-Data & cookie usage: