பெரம்பலூர் மாவட்ட கிராம இளைஞர்களுக்கு கணினி கணக்கியல் இலவச பயிற்சி!

schedule
2023-08-30 | 16:50h
update
2023-08-30 | 16:50h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Free computer accounting training for village youth of Perambalur district!

பெரம்பலூர் ஐஓபி-யின், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு கணினிகணக்கியல் பயிற்சிஇலவசமாக அளிக்கப்படஇருக்கின்றது மேலும் இப்பயிற்சியில் எம்.எஸ். ஆபிஸ் பேக்கேஜ், டாலி பற்றி விரிவாக கற்றுத்தரப்பட உள்ளது.

30 நாட்கள் இப்பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி நடக்கும். பயிற்சி காலத்தில் மதிய உணவு மற்றும் காலை , மாலை தேநீர் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.

Advertisement

19 வயது முதல் 45 வயதுக்குபட்டஎழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும் மேலும் வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் (PIP) அல்லது AAY- குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை அட்டை உள்ள கிராம பஞ்சாயத்தை சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஒபி வங்கியின் மாடுயில் உள்ள (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வி தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்னப்பிக்கவும். விண்ணப்பிக்க குடும்ப அட்டை, ஆதார் அட்டை, நூறு நாள் வேலை அட்டை(குடும்பத்தில் எவரேனும் ஒருவருக்கு) வங்கி புத்தகம், பான் அட்டை, ஆகியவற்றின் நகல் 2 மற்றும் பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ இணைத்து வரும் செப்டம்பர் மாதம் 6ம் தேதி துவங்க இருக்கும் பயிற்சிக்கு முன் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கு பெற்ற பின் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும் என்றும்,

மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்திலோ, அல்லது 04328-277896, +919488840328 என்ற எண்ணிலோ தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.09.2026 - 01:27:38
Privacy-Data & cookie usage: