பெரம்பலூர் மாவட்ட பெண்களுக்கு இலவச காஸ்ட்யூம் ஜூவல்லரி தயாரிப்பு மற்றும் தொழிற்பயிற்சி!

schedule
2022-07-11 | 16:09h
update
2022-07-11 | 16:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Free Costume Jewelery Making and Vocational Training for Women of Perambalur District!

பெரம்பலூர் மதன கோபாலபுரத்தில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் பெண்களுக்கு காஸ்ட்யூம் ஜூவல்லரி தயாரிப்பு மற்றும் தொழிற்பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.

13 நாட்கள் நடக்கும் இப்பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாகவும், பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும். நகை வடிவமைப்பு – வெளிப்புற வடிவமைப்பு மற்றும் உள் புற வடிவமைப்பு, மூட்டு வடிவமைப்பு, நகைகளின் வெவ்வேறு பகுதிகளை அசெம்பிளிங் செய்து புதிய நகைகளை உருவாக்குதல், மோதிரம், நெக்லஸ் , வளையல்கள், சங்கிலி , ஸ்டெட் , டாலர்கள் செய்தல், டெரகோட்டா, மணப்பெண் நகை அலங்கார செட், நகைகளை பேக்கிங் செய்யும் முறை மற்றும் விலை நிர்ணயம் செய்தல் ஆகியன பற்றி சிறந்த வல்லுநர்களால் இலவசமாக கற்று தரப்பட இருக்கின்றது.

Advertisement

பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும், இப்பயிற்சியில் சேர 19 வயது முதல் 45 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள், பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை, வங்கி புத்தகம், ஆகியவற்றின் நகல் ( 2 செட்) , பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 3 ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து ஜுலை 15ஆம் ஆம் தேதி நடக்கவிருக்கும் நேர்முக தேர்வில் பங்கு பெறுபவர்களை பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 03:55:33
Privacy-Data & cookie usage: