பெரம்பலூர் ஐ.ஓ.பி சார்பில் இலவச ஓட்டுனர் பயிற்சி

schedule
2017-08-19 | 20:53h
update
2026-06-24 | 22:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Free Driving Training on behalf of perambalur IOB

பெரம்பலூரில் உள்ள ஐஓபி (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் வெளியிட்ட அறிவிப்பு:

பயிற்சி மையத்தில் 2017ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி முதல் ஓட்டுனர் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. இதற்கு உண்டான வயது 18க்கு மேல் இருத்தல் வேண்டும். எழுத படிக்க தெரிந்தவராக இருத்தல் வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

Advertisement

இந்தப் பயிற்சி தொடர்ந்து 30 நாட்கள்நடைபெறும். பயிற்சி காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கொடுக்கப்படும். பயிற்சி காலத்தில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் இப்பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அத்துடன் ஒட்டுனர் உரிமமும் வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.

குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் (TRANSFER CERTIFICATE) ஆகியவற்றின் நகல், 4 பாஸ்போர்ட் சைஸ், 1 ஸ்டாம்ப் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடக்கவிருக்கும் நேர்முக தேர்வு மற்றும் நுழைவு தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம்,ஷெரீஃப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூர் – 621212 என்ற முகவரியிலோ அல்லது 04328 277896 தொலைப்பேசி மூலமாக தொடர்புக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 22:22:18
Privacy-Data & cookie usage: