பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இலவச இ- சேவை மையம்: எம்.எல்.ஏ. அலுவலகத்தை மாற்றிய அமைச்சர் சிவசங்கர்!

schedule
2022-04-17 | 17:00h
update
2022-04-17 | 17:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Free e-Service Center for Public Use: Minister Sivasankar, changes his MLA office @ Kunnam – Perambalur

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான சிவசங்கர், இன்று தனது குன்னம் தொகுதி எம்.எல்.ஏ அலுவலகத்தை
இலவச இ- சேவை மையமாக மாற்றி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்.

அதில், இலவசமாக ஆதார் கார்டு திருத்தம், வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, பிறப்புச்சான்று, இறப்புச்சான்று, விவசாயிகள் பயன் பெறும் வகையில்‌ பட்டா,சிட்டா, வில்லங்கச்சான்று, சிறு,குறு விவசாயி சான்று மற்றும் போக்குவரத்து‌ அபராத கட்டணம்,‌ ஓய்வூதியத்திட்டம், திருமண உதவி திட்டம் பதிவு, விதவைச்சான்று உள்ளிட்ட பொதுமக்கள்,விவசாயிகள்,மாணவ,மாணவிகள் பயன் பெறும் வகையில்‌ இலவச இ -சேவை மையத்தை, திமுக மாவட்ட செயலாளரும், மாவட்ட ஊராட்சி சேர்மனுமான குன்னம் சி.ராஜேந்திரன் தலைமையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

Advertisement

முன்னதாக, குன்னம் பேருந்து நிறுத்தத்தில், கட்சியினர் அமைத்திருந்த கோடைகால தண்ணீர்‌ பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி, வெள்ளரி, இளநீர், பப்பாளி ஆகியவற்றை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, வி.எஸ்.பெரியசாமி, பொதுக்குழு உறுப்பினர் பட்டுச்செல்வி ராஜேந்திரன், வேப்பூர் தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் சி.ராஜேந்திரன், வேப்பூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தி.மதியழகன், வேப்பூர் ஒன்றிய பெருந்தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி துணை தலைவர் அ.ரசூல்அகமது, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கு.க.அன்பழகன், மாவட்ட வழக்கறிஞரனி துணை செயலாளர் அந்தூர் செல்வம், மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் ந.முத்துச்செல்வன், குன்னம் ஊராட்சி மன்ற தலைவர் தனலெட்சுமி மதியழகன், குன்னம் ஒன்றிய கவுன்சிலர் உமா சந்தோஷ்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மா.பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போக்குரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மற்ற இ-சேவை மையங்களில் கட்டணம் செலுத்த வேண்டும், இங்கு பொதுமக்கள் இலவசமாக அனைத்து வசதிகளையும் பெறலாம். போக்குவரத்துத்துறையில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும், நெடுந்தூர செல்லும் பேருந்துகளுக்கு ஸ்டெஃப்னி வழங்கப்படும் என்றார். தற்போதுதான் போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளேன். விரைவில், சீர்திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 13:51:50
Privacy-Data & cookie usage: