பெரம்பலூரில் இலவச கண் பரிசோதனை முகாம்

schedule
2017-05-21 | 14:00h
update
2026-06-25 | 10:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் அரிமா சங்கம் இன்று 21/05/2017 ஞாயிறு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து மெகா கண்சிகிச்சை முகாம் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடத்தியது.

பயனாளிகள் வெயிலில் அவதிபடாமலிருக்க சாமியானா துணிப்பந்தல், மினரல் வாட்டர், அனைவருக்கும் மோர் பாணம்,மதுரை செல்லும் பயணாளிகளுக்கு மதிய உணவு, குடிநீர் பாக்கட், வழங்கப்பட்டது.

மருந்து மாத்திரைகள், கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது. அரவிந்த் மருத்துவமனையினரே கூட்டம் வந்ததை பார்த்து வியந்தனர்..

சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்த சங்க தலைவர் செந்தில்,மற்றும் நிர்வாகிகளை பாராட்டுகிறேன்..
கலந்து கொண்டோர்: 805
அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்க பட்டோர்: 455.. இவர்கள் அனைவரும் எட்டு பேருந்துகள் மூலம் மதுரை அரவிந்த் மருத்துவமனைக்கு
அனுப்பபட்டனர்..

Advertisement

பெரம்பலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கதத்தின் நிதியுதவியுடன் அரிமா சங்கம் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள், ஆதித்யா ஷாப்பிங் மால்,ஸ்ரீஆனந்த் ஜூவல்லர்ஸ், செந்தூர் மெடிக்கல்ஸ், ரேணுகா சில்க்ஸ் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகிய நிறுவனங்கள் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் தெப்பக்குளம் அருகே உள்ள தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் இன்று நடத்தியது.

முகாமிற்கு சங்கத்தலைவர் என்ஜினியர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சங்கத்தின் சாசன தலைவர் மு.ராஜாராம் முன்னிலை வகித்தார். முகாமை தனலட்சுமி சீனிவாசன் குழும தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் பலர் கலந்து கொண்டு கண்புரை, சர்க்கரை நோய், கண் நீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண்நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து, கண்ணின் கருவிழியில் புண் போன்ற குறைபாடுடைய பரிசோதனை செய்து சிகிக்சை அளித்தனர். பரிசோதனை சிகிச்சைக்காக 805 பேர் கலந்து கொண்டனர். அதில் மேல் சிகிச்சைக்காக 455 பேர் தேர்வு செய்யப்பட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முகாமிற்கான ஏற்பாடுகளை அரிமா சங்க நிர்வாகிகள் பாபு, மகாதேவன், முரளி மற்றும் அரிவையர் சங்க நிர்வாகிகள் புஷ்பாமேரி, கலாவதி, லின்சி மற்றும் மேத் ஐ.டி குழுவினர் செய்து இருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 10:01:17
Privacy-Data & cookie usage: