பெரம்பலூரில் இலவச கண்பரிசோதனை முகாம்: நாளை நடக்கிறது

schedule
2019-05-29 | 08:48h
update
2019-05-29 | 08:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Free Eye Testing Camp in Perambalur: Tomorrow is going

பெரம்பலூரில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதியுதவியுடன் அரிமா சங்கம் மற்றும் முன்னணி நிறுவனங்கள், மதுரை அரவிந்த் கண்மருத்துவமனை சார்பில் இலவச கண்பரிசோதனை முகாம் தெப்பகுளம் அருகில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 8மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிவரை நடக்கிறது.

Advertisement

மாவட்ட கலெக்டர் வே.சாந்தா கண்பரிசோதனை முகாமை தொடங்கி வைக்கிறார். இந்த முகாமில் அனைத்து கண்பரிசோதனைகளும் முழுமையாக நடைபெற உள்ளது. கண்அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவோர். மதுரை கண்மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு இலவச அறுவைசிகிச்சையும் (ஐ.ஓ.எல்.) மேற்கொள்ளப்பட்ட இருப்பதால் இந்தமுகாமில் பெரம்பலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த கண்குறைபாடு உள்ளவர்கள் தங்களது கண்களை பரிசோதனை செய்து பயன்பெறுமாறு அரிமா சங்க தலைவர் ஆதித்யா கதிரேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.07.2026 - 06:01:50
Privacy-Data & cookie usage: