Free fast food preparation training for rural people in Perambalur district

பெரம்பலூர் சங்குப்பேட்டை அருகே உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த ஆண் மற்றும் பெண்களுக்கான துரித உணவுகள் தயாரித்தல் பயிற்சி இலவசமாக அளிக்கப்பட இருக்கின்றது மேலும் இப்பயிற்சியில் பானி பூரி, பேல் பூரி, பாவ் பாஜி, சமோசா, கச்சோரி, கோபி மஞ்சூரியன், ஆனியன் பக்கோடா, சிக்கன் & வெஜிடபிள் பிரைட் ரைஸ், வெஜிடபிள் புலாவ், நூடுல்ஸ் வகைகள், வெஜ் மோமோஸ் ஆகிய உணவு பொருள்கள் எப்படி செய்வது என்பது பற்றி விரிவாக கற்றுத்தரப்பட இருக்கின்றது.

10 நாட்கள் நடக்கும் இப்பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை. காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும். இப்பயிற்சியில் சேர 18 வயது முதல் 45 வயதுக்குபட்ட, எழுத படிக்கதெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும் மேலும் வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் (PIP) அல்லது AAY- குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரிவேலை அட்டை உள்ள கிராமப்புற ஆண் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித்தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்பஅட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து ஜனவரி மாதம் 25 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கீழ்கண்ட அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்யவும், என்றும், மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், சங்கு சமீபம், பெரம்பலூர் – 621212 என்ற முகவரியிலோ அல்லது 04328-277896 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2021 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!