பெரம்பலூரில் பாஸ்ட் புட் தயாரிக்கும் இலவச பயிற்சி!

schedule
2021-11-27 | 06:34h
update
2021-11-27 | 06:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Free Fast Food Training in Perambalur!

பெரம்பலூரில் உள்ள ஐஓபி கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் வெளியிட்ட அறிக்கையின் விவரம்:

பயிற்சிமையத்தில் 20க்கும் மேற்பட்ட துரித உணவுகள் தயாரித்தல் பற்றி இலவச செய்முறை பயிற்சி வகுப்பு வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்பட இருக்கின்றது. இதற்கு உண்டான வயது 18க்கு மேல் மற்றும் 45க்கு குறைவாக, எழுத படிக்க தெரிந்தவராக, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

Advertisement

இப்பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை, 10 நாட்கள் நடக்கும். காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும், கிராமப்புற இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து நவம்பர் 29-ம் ஆம் தேதிக்குள் சமர்பித்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.06.2026 - 16:19:05
Privacy-Data & cookie usage: