பெரம்பலூர் மாவட்ட கிராமப் பகுதியினருக்கு இலவச சணல் பை தயாரிப்பு பயிற்சி!

schedule
2021-12-02 | 11:24h
update
2021-12-02 | 11:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Free jute bag making training for rural people of Perambalur district!

பெரம்பலூர் சங்கு அருகே உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், வல்லுநர்களால் சணல் பை தயாரிப்பு பயிற்சி இலவசமாக வரும் டிசம்பர் 13 ஆம் தேதி முதல் அளிக்கப்பட உள்ளது.

13 நாட்கள் நடக்கும், பயிற்சியானது, காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். காலை மற்றும் மதிய உணவு வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.

Advertisement

19 வயது முதல் 45 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும், மேலும், வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் (PIP) அல்லது AAY / PHH – குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் தேசிய வேலை ஊரக உறுதி வேலை அட்டை உள்ள கிராமப் புற ஆண் / பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள், குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து டிசம்பர் 9 ஆம் தேதி நடக்கவிருக்கும் நேர்முக தேர்வில் பெறுபவர்களுக்கு பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு ஐ.ஓ.பி., கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், ஷெரீஃப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூர் – 621212 என்ற தொடர்பு கொள்ளலாம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 16:47:56
Privacy-Data & cookie usage: