நாமக்கல்லில் பெண்களுக்கு இலவச தையல் கலை பயிற்சி ; இந்தியன் வங்கி அழைப்பு

schedule
2018-11-16 | 12:12h
update
2026-04-18 | 13:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Free sewing arts training for women in Namakkal; Indian bank call

model


நாமக்கல், இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு நிறுவன இயக்குனர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே பயிற்சி நிறுவனமான இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

Advertisement

இந்நிறுவனத்தில் பெண்களுக்கான 30 முழுவேலை நாட்களாக தையல்க்கலை பயிற்சி வரும் 26 ம் தேதி துவங்கப்படுகிறது. பொது மக்களிடையே அதிக தேவையும் வரவேற்பும் உள்ளதால் அதிக லாப நோக்குள்ள இப்பயிற்சி பயன்படவுள்ளது. எனவே ஆர்வமுள்ள தொழில் முனைவோர், புதிய தொழில் முனைவோர் இந்த பயி்ற்சிக்கு நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த பெண்கள் 35 நபர்கள் வரும் 22ம் தேதி நேர் காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் மற்றும் முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இப்பற்சிக்கு குறைந்த பட்ச கல்வி தகுதியாக 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.18 வயது மேற்பட்டவர் 45 வயதிற்குள் இருக்கவேண்டும்.

பயி்ற்சி செலவு, பயிற்சி பொருட்கள், உணவு என அனைத்துள் இலவசமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் திருச்சி ரோடு ரயி்ல்வே மேம்பாலம் அருகில் அமைந்துள்ள இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு நிறுவனத்தில் வரும் 22ம் தேதி நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம் எனதெரிவித்துள்ளார்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.04.2026 - 13:29:51
Privacy-Data & cookie usage: