பெரம்பலூர் மாவட்ட பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி!

schedule
2023-04-01 | 13:56h
update
2023-04-01 | 13:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Free sewing training for women of Perambalur district!

model

பெரம்பலூர் மதன கோபாலபுரத்தில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்புபயிற்சி மையத்தின் மூலம்பெண்களுக்கான தையல்கலை பயிற்சிஇலவசமாக வரும் வரும் 5.ம் தேதி முதல் அளிக்கப்பட உள்ளது,

சிம்மிஸ், பெட்டிக்கோடு, பட்டுப்பாவாடை, யூனிஃபார்ம் ஸ்கர்ட், அரைக்கை சர்ட், யூனிஃபார்ம் டிராயர் , பேபி ஃபிராக், கட்டோரி பிளவுஸ் , நைட்டி , சுடிதார் டாப் , அம்பர்லா டாப் , நைட் சூட் ஆகியன பற்றி சிறந்த வல்லுநர்களால் கற்று தரப்பட இருக்கின்றது.

Advertisement

30 நாட்கள் நடக்கும் இப்பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும். வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.

19 வயது முதல் 45 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும், வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் (PIP) அல்லது AAY – குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை அட்டை. வங்கி கணக்கு புத்தகம், உள்ள கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு, குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை வங்கி கணக்கு புத்தகம் பான் கார்டு ஆகியவற்றின் நகல், பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ 3 ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து ஏப்ரல் 3 ஆம் தேதி நடக்கவிருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கு பெற்ற பின் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04328-277896, என்ற எண்ணிலோ +919488840328 தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
31.08.2026 - 15:09:27
Privacy-Data & cookie usage: