Free Special Buses to Attend Employment Camp: Perambalur Collector Info!

பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துடன் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் இணைந்து 29.04.2023 அன்று நடைபெற உள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமிற்கு வேலை நாடுனர்கள் வந்து செல்வதற்காக வசதியாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் இலவச பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் என 8ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸ், பொறியியல், பட்டப்படிப்டபு வரை அனைவருக்கும் அவர்களின் திறமைக்கேற்ற வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 29.04.2023 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, ஓசூர், செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள முன்னனி நிறுவனங்கள் கலந்து கொள்ளப்பட உள்ளனர். இதில் முக்கியமான 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெறவுள்ளது. பெரம்பலுார் மாவட்ட இளைஞர்களுக்கு 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பை தர தயாராக உள்ளனர்.

இதில் கலந்து கொள்வதற்காக வருகை தரவுள்ள வேலை நாடுநர்களின் வசதிகேற்ப மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் இலவச பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதல் சுற்று காலை 08 மணிக்கும், இரண்டாவது சுற்று காலை 09 மணிக்கும் புறப்படும்.

1. பூலாம்பாடியிலிருந்து புறப்படும் பேருந்து அரும்பாவூர், தழுதாழை, வெங்கலம், கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை எசனை வழியாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடத்தினை வந்தடையும்.

2. பில்லாங்குளத்திலிருந்து புறப்படும் பேருந்து கை.களத்தூர், சிறுநிலா, நெற்குணம், பாண்டகபாடி, வெண்பாவூர், வேப்பந்தட்டை எசனை வழியாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடத்தினை வந்தடையும்.

3. பசும்பலூரிலிருந்து புறப்படும் பேருந்து பிம்பலூர், வி.களத்தூர், பேரையூர், எறையூர், மங்களமேடு, வாலிகண்டபுரம், தண்ணீர்பந்தல், நான்கு ரோடு வழியாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடத்தினை வந்தடையும்.

4. தேனூரிலிருந்து புறப்படும் பேருந்து டி.களத்தூர், நக்கசேலம், செட்டிக்குளம், சத்திரமனை, வேலூர், ரெங்கநாதபுரம், செஞ்சேரி வழியாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடத்தினை வந்தடையும்.

5. பாடாலூரிலிருந்து புறப்படும் பேருந்து இரூர், ஆலத்தூர், நாரணமங்கலம், சிறுவாச்சூர், நான்கு ரோடு வழியாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடத்தினை வந்தடையும்.

6. கொளக்காநத்தத்திலிருந்து புறப்படும் பேருந்து இலுப்பைகுடி, பிலிமிசை, கூத்தூர், மேல உசேன் நகரம், அல்லிநகரம் மருதையான் கோவில், மேலமாத்தூர், குன்னம், பேரளி நான்கு ரோடு வழியாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடத்தினை வந்தடையும்.

7. திருமாந்துறையிலிருந்து புறப்படும் பேருந்து லெப்பைக்குடிக்காடு, கழனிவாசல், சு.ஆடுதுறை, ஓகளூர், வடக்கலூர், கிழுமத்தூர் மாதிரி பள்ளி, வேப்பூர், பரவாய், குன்னம், பேரளி நான்கு ரோடு வழியாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடத்தினை வந்தடையும்.

8. அகரம் சீகூரிலிருந்து புறப்படும் பேருந்து அத்தியூர், வயலூர், வயலப்பாடி, துங்கபுரம், புதுவேட்டக்குடி, நல்லறிக்கை, கொளப்பாடி, பெரிய வெண்மணி, மேலமாத்தூர், குன்னம், பேரளி நான்கு ரோடு வழியாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடத்தினை வந்தடையும்.

9. களரம்பட்டியில் இருந்து புறப்படும் பேருந்து அம்மாபாளையம், ஈச்சம்பட்டி, குரும்பலூர், பாளையம், செஞ்சேரி வழியாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடத்தினை வந்தடையும்.

10. கீழப்புலியூரில் இருந்து புறப்படும் பேருந்து எழுமூர், சித்தளி, அசூர், குன்னம், பேரளி நான்கு ரோடு வழியாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடத்தினை வந்தடையும்.

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடத்திற்கு வந்து செல்வதற்கு ஏதுவாக இலவச பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப புதிய வழித்தடங்களிலும் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்படும். வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளன்று புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நல்ல வாய்ப்பினை வேலை நாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!