பெண்களுக்காக இலவச தையல் பயிற்சி: பெரம்பலூர் ஐ.ஓ.பி வங்கி அறிவிப்பு!

schedule
2021-09-20 | 08:34h
update
2021-09-20 | 08:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Free Tailoring for Women: Perambalur IOB Bank Announcement!

பெரம்பலூர் மதன கோபாலபுரத்தில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் பெண்களுக்கான தையல்கலை பயிற்சி இலவசமாக வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அளிக்கப்பட இருக்கின்றது. மேலும் இப்பயிற்சியில் சிம்மிஸ், பெட்டிக்கோடு, பட்டுப்பாவாடை, யூனிபோர்ம் ஸ்கிர்ட், அரைக்கை சர்ட், யூனிபோர்ம் ட்ராயர் ,பேபி பிராக், கட்டோரி பிளவுஸ் , நைட்டி , சுடிதார் டாப் , அம்பர்லா டாப் , நைட் சூட் ஆகியன பற்றி சிறந்த வல்லுநர்களால் கற்று தரப்பட இருக்கின்றது.

Advertisement

பயிற்சியின் கால அளவு 30 நாட்கள் பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.

இப்பயிற்சியில் சேர 18 வயது முதல் 45 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும் மேலும் வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் (PIP) அல்லது AAY – குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை அட்டை உள்ள கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து செப்டம்பர் 22 ஆம் தேதி நடக்கவிருக்கும் நேர்முக தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், ஷெரீஃப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூர் – 621212 என்ற முகவரியிலோ அல்லது 04328-277896, என்ற எண்ணிலோ +91 94888 40328 தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.05.2026 - 08:32:43
Privacy-Data & cookie usage: