பெரம்பலூர் மாவட்ட இளைஞர்களுக்கு இலவச பொம்மை தயாரித்தல் தொழிற்பயிற்சி!

schedule
2021-12-06 | 07:07h
update
2021-12-06 | 07:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Free toy making training for Perambalur district youth!

பெரம்பலூரில் உள்ள ஐஓபி கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பொம்மை தயாரித்தல் பயிற்சி வகுப்பு வருகிற டிசம்பர் 15 ஆம் தேதி முதல் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இலவசமாக அளிக்கப்பட உள்ளது. 18 முதல் 45 வயதிற்கு குறைவாக, எழுத படிக்க தெரிந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

Advertisement

இப்பயிற்சி, காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை 13 நாட்கள் நடக்கும், பயிற்சியின் போது, காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும், கிராமப்புற இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டை, ஆதார் கார்டு பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து டிசம்பர் 14ம் ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 17:37:46
Privacy-Data & cookie usage: