Free training camp in Namakkal on soil management in landscape mode
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட தலைவர் டாக்டர் அகிலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 31ம் தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு இயற்கை முறையில் மண்வள மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இப்பயிற்சி முகாமில் மண் வளம், மண்வளத்தினை கண்டறியும் வழிமுறைகள், இயற்கை எருக்கள் மற்றும் உயிர் உரங்களின் பயன் பாட்டினால் மண்வளத்தை மேம்படுத்தும் உத்திகள் இயற்கை முறையில் சாகுபடி குறிப்புகள், ஊட்டச்சத்து மேலாண்மை, வறட்சி மேலாண்மை, மண் மற்றும் நீர் மாதிரி சேகரித்தல், சிறப்பான மண்வளத்தினால் பயிர்களில் ஏற்படும் நன்மைகள், மண்வளத்திற்கேற்ற சமச்சீர் உரமிடுதல் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையைக் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்யும் முறைகள் பற்றிய தெளிவான விளக்கங்கள் அளிக்கப்படும்.
இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
விருப்பம் உள்ளவர்கள் நாமக்கல் வேளாண்மைஅறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ வரும் 31ம் தேதி காலை 9 மணிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் எனதெரிவித்துள்ளார்.