தொகுதி IV, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உட்பட அரசு பதவிகளுக்கான தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2022-04-07 | 15:11h
update
2022-04-07 | 15:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Free Training Classes for Examinations for Government Posts including Volume IV, Police Sub-Inspector: Perambalur Collector Information! 

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள தொகுதி IV தேர்விற்கும், தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள உதவி ஆய்வாளர் மற்றும் விரைவில் வெளியாகவுள்ள இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடத்திற்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.

Advertisement

அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி IV அடங்கிய பணிகளான இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், போன்ற 7301 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் உதவி ஆய்வாளர் பதவிக்கு 444 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் விரைவில் வெளியாகவுள்ள இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வருகின்ற 12.04.2022 அன்று இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 9080182131 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்துக் கொள்ளுமாறு பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 13:51:42
Privacy-Data & cookie usage: