விமானப்படைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு : பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

schedule
2018-05-04 | 08:45h
update
2018-05-04 | 08:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Free Training Course for Air Force Examination: Perambalur District Collector Information

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேலை நாடும் இளைஞர்களுக்கு பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

இப்பயிற்சி வகுப்புகள் மூலம் பயின்று பல்வேறு நபர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய விமானப்படையில் ஆள் தேர்வுக்கான முகாம் தஞ்சாவூரில் ஜீன் – 2018 இரண்டாம் வாரத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பெரம்பலூர்ர் மாவட்டத்தில் உள்ள 12-ஆம் வகுப்பு தோ;ச்சி பெற்ற 17 முதல் 21 வயது வரையிலான மாணவர்கள் கலந்துகொண்டு பயனடையலாம்.

இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு 09.05.2018 அன்று துவங்கப்பட உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் கடவுச்சீட்டு அளவு புகைப்படம், சுய விவரக் குறிப்பு, மின்னஞ்சல் முகவரி மற்றும் கைப்பேசி எண் விவரங்களுடன் 08.05.2018-க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பம் சமர்பித்து இலவச பயிற்சி வகுப்பில் பங்கு பெறலாம். தகுதியும், ஆர்வமும் உள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 09:28:41
Privacy-Data & cookie usage: