குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு

schedule
2017-05-18 | 14:33h
update
2026-06-24 | 01:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேலைநாடும் இளைஞர்களுக்கு அவ்வப்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் வெளியிடப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

இப்பயிற்சி வகுப்புகள் மூலம் பயின்று பலரும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2017 ஆம் ஆண்டு திட்ட அறிக்கையின்படி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி 2ஏ- யில் அடங்கிய 1953 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தோ;வுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்ய கடைசி நாள் 26.05.2017 ஆகும்.

மேற்குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பம் செய்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு 26.05.2017 முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தமைக்கான ஆதாரம் கடவுச்சீட்டு அளவு புகைப்படம், சுய விவரக்குறிப்பு மின்னஞ்சல் முகவரி மற்றும் கைப்பேசி எண் விவரங்களுடன் 25.05.2017-க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 01:59:53
Privacy-Data & cookie usage: