முதுகலை ஆசிரியர் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு

schedule
2017-05-30 | 14:27h
update
2026-04-29 | 12:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேலைநாடும் இளைஞர்களுக்கு பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலுக தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயிற்சியினை பெற்று பலரும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர்.

Advertisement

2017 ஆம் ஆண்டு திட்ட அறிக்கையின்படி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள டி.என்.பி.எஸ்.சி தொகுதி 2ஏ முதுகலை ஆசிரியர்; எஸ்.எஸ்.சி (மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்) ஆகிய தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.

25.5.2017 முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2ஏ தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு 01.06.2017 முதலும், எஸ்.எஸ்.சி (பட்டப்படிப்பு முடித்தவர்கள்) தேர்வுக்கு 15.06.2017 முதலும் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.

மேற்குறிப்பிட்ட தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்தவர்கள் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு உரிய ஆவணங்களுடன் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பம் சமர்பித்து, தங்களது பெயரை பதிவு செய்துகொள்ளலாம், என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.04.2026 - 12:52:04
Privacy-Data & cookie usage: