குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ போட்டித் தேர்வுக்கான நேரடி இலவச பயிற்சி; பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2022-01-05 | 11:32h
update
2022-01-05 | 12:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Free training for Group 4 and Group 2A competitive exams; Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2022-ற்கான உத்தேச தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் குரூப் II – 5730 பணியிடங்களும் குரூப் IV, VAO– 5255 பணியிடங்களுக்கு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் தேர்விற்கான அறிவிக்கை வெளியிடவுள்ளதைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட போட்டித் தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு, இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 08.01.2022 முதல் வாரந்தோறும் சனி, ஞாயிறுகளில் காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறவுள்ளது.

Advertisement

இப்பயிற்சி வகுப்பில் தேர்விற்கான பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதோடு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இவ்வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலைவய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்து, வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக இப்பயிற்சி வகுப்புகள் ரத்து செய்யப்படுகிறது என தகவல் தெரிவிக்கப்பபட்டுள்ளது. பின்னர், ஆன்லைன் வகுப்புகள் நடத்த வாய்ப்பு உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.08.2026 - 04:50:52
Privacy-Data & cookie usage: