பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு, காகித பைகள், ஆபிஸ் கவர்கள், பைல்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி!

schedule
2022-12-09 | 13:23h
update
2022-12-09 | 13:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Free training for making paper bags, office covers, Files for people belonging to Perambalur district!

பெரம்பலூர் மதன கோபாலபுரத்தில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் ஆண் மற்றும் பெண்களுக்கு காகித பைகள் தயாரிப்பு பயிற்சி 19வா டிசம்பா; 2022 முதல் இலவசமாக அளிக்கப்பட இருக்கின்றது.

Advertisement

காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 10 நாட்கள் நடக்கும். இப்பயிற்சியின் போது, காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும். வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.

இப்பயிற்சியில் சேர 19 வயது முதல் 45 வயதுக்குபட்டஇ எழுத படிக்க தெரிந்த சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் அல்லது AAY-குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை அட்டை உள்ள கிராம பஞ்சாயத்தை சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை, வங்கி புத்தகம் ஆகியவற்றின் 2 நகல் 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து டிசம்பர் 14 ஆம் தேதிக்குள் பதிவு செய்யவும். மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தை தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.06.2026 - 10:22:13
Privacy-Data & cookie usage: