பெரம்பலூர் மாவட்ட பெண்களுக்கு, அப்பளம், ஊறுகாய் மற்றும் மசாலா தயாரிப்பு பயிற்சி

schedule
2017-12-14 | 00:45h
update
2017-12-14 | 00:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Free training for women in Perambalur district, papad, pickle and spice

பெரம்பலூரில் உள்ள ஐஓபி (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் வெளியிட்ட அறிக்கை :

பயிற்சி மையத்தில் பெண்களுக்கான அப்பளம்,ஊறுகாய் மற்றும் மசாலா தயாரிப்பு பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. இதற்கு உண்டான வயது 18க்கு மேல் மற்றும் 45க்கு குறைவாக, எழுத படிக்க தெரிந்தவராக,பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

Advertisement

இந்தப் பயிற்சிதொடர்ந்து 10 நாட்கள்நடைபெறும். . பயிற்சிநேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை. பயிற்சி காலத்தில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் இப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் அரசால் அங்கீகரிக்கப் பட்டதாகும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.

குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் (TRANSFER CERTIFICATE) ஆகியவற்றின் நகல், 4 பாஸ்போர்ட் சைஸ், 1 ஸ்டாம்ப் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைக்கவும்.மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம்,ஷெரீஃப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூர் – 621212 என்ற முகவரியிலோ அல்லது 04328 277896 தொலைப்பேசி மூலமாக தொடர்புக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 12:05:48
Privacy-Data & cookie usage: