பெரம்பலூரில், சி.சி.டிவி கேமரா, பொருத்துதல் மற்றும் சேவை குறித்த இலவச பயிற்சி

schedule
2018-12-25 | 01:21h
update
2026-08-17 | 17:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Free training on CCTV cameras, positioning and service in Perambalur

பெரம்பலூரில் உள்ள ஐஓபி (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

பயிற்சி மையத்தில் 2019ஆம் வருடம் ஜனவரி மாதம் 3ஆம் தேதி முதல் சி.சி.டிவி கேமரா, பொருத்துதல் மற்றும் சேவை பயிற்சி இலவசமாக. அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி பெற 18வயதுக்கு மேல் உள்ளவராகவும்,எழுத படிக்க தெரிந்தவராகவும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

Advertisement

இந்தப்பயிற்சிதொடர்ந்து 13 நாட்கள்நடைபெறும்.பயிற்சிநேரம்காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்.பயிற்சி முடிந்தவுடன் இப்பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.

குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் (TRANSFER CERTIFICATE) ஆகியவற்றின் நகல், 4 பாஸ்போர்ட் சைஸ், 1 ஸ்டாம்ப் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து ஜனவரி 2 ஆம் தேதி நடக்கவிருக்கும் நேர்முக தேர்வு மற்றும் நுழைவு தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம்,ஷெரீஃப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூர் – 621212 என்ற முகவரியிலோ அல்லது 04328 277896 என்ற தொலைப்பேசி மூலமாக தொடர்புக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.08.2026 - 17:27:25
Privacy-Data & cookie usage: