பெரம்பலூரில் இரு சக்கர வாகன பழுது நீக்கும் இலவச பயிற்சி!

schedule
2021-04-15 | 16:01h
update
2021-04-15 | 16:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Free Two Wheeler Repair Training in Perambalur!

பெரம்பலூரில் உள்ள ஐஓபி வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் தெரிவித்துள்ளதாவது:

இரு சக்கர வாகன பழுது நீக்கல் இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற ஏப்ரல் 21ம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்படுகிறது. இதற்கு உண்டான வயது 18க்கு மேல் மற்றும் 45க்கு குறைவாக, எழுத படிக்க தெரிந்தவராக,பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக. சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

Advertisement

பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை, 30 நாட்கள் நடக்கும். காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும். வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும், கிராமப்புற இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் சங்குப்பேட்டை ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில், பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டை, ஆதார் கார்டு பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து ஏப்ரல் 19-ம் ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 04328-277896, 9488840328 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 17:15:47
Privacy-Data & cookie usage: