பெரம்பலூர் அருகே சரக்கு ஆட்டோ மோதி ஒருவர் பலி! 2 பேர் படுகாயம்!!

schedule
2019-04-27 | 08:37h
update
2019-04-27 | 08:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Freight Auto collision killed one person near in Perambalur! 2 injured

பெரம்பலூர் மாவட்டம், தொண்டமாந்துறையை சேர்ந்தவர் மதலைமுத்து (வயது 52) விவசாயி. இவரும் அதே ஊரைச் சேர்ந்த சபரிவாசன்(65), ஜியாவுதீன்(35) ஆகிய 3 பேரும் தொண்டமாந்துறையிலிருந்து அரும்பாவூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

Advertisement

அப்போது மோட்டார் சைக்கிளை மதலைமுத்து ஓட்டினார். எதிரே அரும்பாவூரிலிருந்து சரக்கு ஆட்டோவை ராம்குமார் என்பவர் ஓட்டி வந்தார். அரும்பாவூருக்கும் தொண்டமாந்துறைக்கும் இடையே வந்தபோது மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் மதலைமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சபரிவாசன், ஜியாவுதீன் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு ஆட்டோ டிரைவர் ராஜ்குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.07.2026 - 04:07:27
Privacy-Data & cookie usage: