நாளை பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் தொடக்கம் : பெரம்பலூர் மாவட்டத்தில் 8931 பேர் எழுதுகிறார்கள்.

schedule
2018-02-28 | 16:40h
update
2026-07-05 | 00:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

From tomorrow’s 12th exams: 8931 people write in Perambalur district.

பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்மொழிதேவி விடுத்துள்ள தகவல்:

பெரம்பலூர் மாவட்டத்தில் 01.03.2018 முதல் 06.04.2018 முடிய நடைபெற உள்ள பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை, 29 தேர்வு மையங்களில் 4,403 மாணவர்களும், 4,528 மாணவிகளும் என மொத்தம் 8,931 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

பதினோராம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு 07.03.2018 முதல் 16.04.2018 முடிய 4,284 மாணவர்களும், 4,318 மாணவிகளும் என மொத்தம் 8,602 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

Advertisement

இத்தேர்வு மையத்திற்கு முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 29 தலைமையாசிரியர்களும், 29 தேர்வு மையத்திற்கும் 29 துறை அலுவலர் மற்றும் கூடுதல் துறை அலுவலராக 07 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பபட்டுள்ளனர்.

தேர்வு மையத்திற்கு 9 வழித்தடங்களில் வினாத்தாட்களை பாதுகாப்பான முறையில் எடுத்துச் செல்ல 9 வழித்தட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இத்தேர்வுக்கு அறை கண்காணிப்பாளர்களாக 556 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இத்தேர்வுகள் நல்ல முறையில் நடைபெற 71 பறக்கும் படை உறுப்பினர்கள் என மொத்தம் 636 ஆசிரியர்கள் தேர் பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும், தேர்வு பணியில் ஈடுபடும் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் ஆசிரியர்கள், வழித்தட அலுவலர்கள், பறக்கும் படை உறுப்பினர் மற்றும் அறை கண்காணிப்பாளர்களுக்கு 26.02..2018 மற்றும் 27.02..2018 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற கூட்டத்தில் அரசுத் தேர்வுகள் இயக்குநரால் வழங்கப்பட்ட நெறிமுறைகளை விளக்கத்துடன் எடுத்துக் கூறி, அதனை கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுரைகளை வழங்கப்பட்டுள்ளது.

தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கல்வி அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்களைக் கொண்டு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறை மூலம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அலைபேசி (கைபேசி)யை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசுப் பொது தேர்வு எழுதும் அனைத்து மாணவ – மாணவிகளும் தங்கள் தேர்வை சிறப்பாக எழுதி வெற்றிப்பெற வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 00:08:34
Privacy-Data & cookie usage: