எசனை ஊராட்சியில் முழுத் தூய்மைப் பணி : 8 ஊராட்சிகளை சேர்ந்த பணியாளர்கள் செய்தனர்

schedule
2021-08-01 | 15:29h
update
2021-08-01 | 15:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Full cleaning work in Esanai panchayat: Employees from 8 panchayats did

பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எசனை ஊராட்சியில் முழு வீச்சில் கிராமத்தை முழுவதுமாக சுத்தம் செய்யும் பணி நடந்தது. அதில், எசனை, கீழக்கரை, கோனேரிப்பாளையம், ஆலம்பாடி, எளம்பலூர், வடக்குமாதவி, செங்குணம், கவுல்பாளையம் ஆகிய 8 ஊராட்சிகளை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள் (தூய்மை பாரத இயக்கம்), ஆகியோர் கிராமத்தில் உள்ள குப்பைகள், கழிவுநீர்க் கால்வாய்களை சுத்தம் செய்தனர். இதனைத் தொடர்ந்து வீடுவீடாக சென்று குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து தரவும், திறந்த வெளியில் மலம் கழித்தலை தவிர்த்து கழிப்பறையை பயன்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், ஊராட்சி தலைவர் சத்யாபன்னீர்செல்வம், ஊராட்சி செயலர் சரவணன், மற்றும் வி.பி.ஆர்.சி., சுய உதவிக்குழுவினர், தூய்மை பாரத இயக்க ஊக்குவிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.09.2026 - 08:13:07
Privacy-Data & cookie usage: