பெரம்பலூரை சுற்றியுள்ள 8 கி.மீ பகுதிகளுக்கு முழு ஊரடங்கு : கலெக்டர் வே.சாந்தா அறிவிப்பு!

schedule
2020-04-24 | 17:25h
update
2020-04-24 | 17:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Full curfew for 8km area around Perambalur: Collector V Santha announces!

Advertisement

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு:

பெரம்பலூரை சுற்றியுள்ள 8 கி.மீ பகுதிகளில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மருத்துவமனை மற்றும் மருந்தகங்களை தவிர மற்ற அனைத்து வணிக நிறுவனங்களும் இயங்காது. மேலும் மேற்காணும் தினங்களில் எவ்வித வாகன போக்குவரத்திற்கும் அனுமதி கிடையாது.
மேலும் இந்த முழு ஊரடங்கு காலத்தில் செயல்படும் கடைகள் சீலிடப்படும். தடைக்காலத்தில் நடமாடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே பொதுமக்கள் முழு ஊரடங்கு காலத்தில் பாதுகாப்பாக வீட்டில் இருந்து தங்களை காத்து கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.07.2026 - 11:51:15
Privacy-Data & cookie usage: