காந்தி பிறந்த நாள்; பெரம்பலூர் மாவட்டத்தில், கிராம சபைக் கூட்டம்: பெரம்பலூர் கலெக்டர்!

schedule
2021-09-30 | 13:26h
update
2021-09-30 | 13:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Gandhi’s birthday; In Perambalur district, Gramma Sabha meeting: Perambalur Collector!

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் 02.10.2021 காந்தி பிறந்த நாளன்று பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 ஊராட்சிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள 7 ஊராட்சிகள் தவிர இதர 114 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர்கள், தலைமையில் நடத்தப்பட உள்ளது. ஊராட்சி துணைத் தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கிராம சபைக் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல் வேண்டும்.

Advertisement

அரசு நலத் திட்டங்களை கூட்டத்தில் வழங்குதல் வேண்டும். அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிதல் வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தாங்கள் வாக்காளர்களாக சார்ந்துள்ள கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கூட்டம் நல்ல முறையில் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரால், பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மண்டல அலுவலர்கள், மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்து தக்க ஒத்துழைப்பு தரவும், கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பாக அரசால் வெளியிடப்பட்ட வழிமுறைகளைக் கடைபிடித்து நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 09:50:17
Privacy-Data & cookie usage: