காந்தி பிறந்த நாள் : பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம சபைக் கூட்டம்!, அமைச்சர், கலெக்டர், எம்.எல்.ஏ கலந்து கொண்டனர்.

schedule
2021-10-02 | 13:18h
update
2021-10-02 | 14:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Gandhi’s Birthday: Village Council Meeting in Perambalur District !, attended by Minister, Collector, MLA.

பெரம்பலூர் மாவட்டத்தில் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, 121 ஊராட்களில் 114 ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. மீதமுள்ள 7 ஊராட்சிகளில் தற்காலிக இடைத் தேர்தல் நடைபெறுவதால் கூட்டங்கள் நடைபெறவில்லை.

Advertisement

முன்னதாக இன்னு காலை பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், அருகே உள்ள காந்தி சிலைக்குஈ பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா, எம்.எல்.ஏ பிரபாகரன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கலந்து கொண்டனர். பின்னர், குன்னம் தொகுதிக்கு உட்பட்ட, வெண்மணி கிராமத்தில். அமைச்சர் முன்னிலையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட, அரசலூர், ஈச்சாங்காடு பகுதியை சேர்ந்த பகுதி மக்கள் அரசலூரை தனி ஊராட்சியாக அறிவிக்க கோரி, சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதில் , கலைந்து சென்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.05.2026 - 20:45:51
Privacy-Data & cookie usage: