ஆடு மேய்த்த பெண்ணிடம் தாலியை பறிக்க முயன்ற கும்பலை, போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்!

schedule
2021-11-08 | 17:08h
update
2021-11-08 | 17:11h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Gang were caught by the public and handed over to the police who tried to snatch Tali from the shepherd womanl!

கற்பனை காட்சி

பெரம்பலூர் அருகே செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த புண்ணியமூர்த்தி மனைவி பார்வதி (50). தனது, வயல் காட்டில் இன்று மாலை 5.15 மணியளவில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரிந்த பெயர் விலாசம் தெரியாத இரண்டு நபர்கள் பார்வதி அருகில் வந்து அவரது கழுத்தை பிடித்து கொண்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலி கயிற்றை பறிக்க முயற்சி செய்தனர். பார்வதி சத்தம் போட்டார். அப்போது, 2 நபர்களும் ஓடி அங்கே இருந்த காரில் ஏறி தப்பி சென்று விட்டதாகவும், இவர் போட்ட சத்தத்தினால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து என்னவென்று விசாரித்து புதுநடுவலூர் கிராம மக்கள் சாலையின் குறுக்கே கற்களை போட்டு காரை வழிமறித்து காரில் வந்தவர்களை மடக்கி பிடித்து நடத்திய விசாரணையில், எளம்பலூர் அருகே உள்ள தண்ணீர் பந்தலை சேர்ந்த, ராஜா மகன் வெங்கடேஷ் (21), சுப்பிரமணி மகன் குமரேசன் (23), சுரேஷ்குமார் (26) என்பது தெரியவந்தது. அவர்களை செல்லியம்பாளையம் மாரியம்மன் கோவிலில் பிடித்து வைத்தனர். இது குறித்து, தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும், சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து நடத்திய விசாரணையில், அந்த கும்பலை சேர்ந்த அதே ஊரை, சேர்ந்த, கோபு மகன் கண்ணதாசன் என்பவரையும் பிடித்து அவரையும் பெரம்பலூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றர். ஆடு மேய்த்த பெண்ணிடம் தாலி பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 13:43:31
Privacy-Data & cookie usage: