பெரம்பலூர் நகருக்குள் காற்றில் பறக்கும் குப்பைகள்: குப்பைத் தொட்டிகளை வைக்க பொதுமக்கள் கோரிக்கை!

schedule
2022-08-26 | 16:58h
update
2022-08-26 | 16:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Garbage flying in the air in Perambalur city: Citizens request to put garbage bins!

Advertisement

பெரம்பலூர் நகரில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படாததால் ஆங்காங்கே பொதுமக்கள் குப்பை கொட்டியும், வீசியும் செல்கின்றனர். இதனால் நகர் முழுவதும் குப்பைகள் காற்றில் பறக்கின்றன. இதனால், சாலையில் செல்வோர்கள் மீதும், வாகன ஓட்டிகள் மீதும் விழுகிறது. பலத்த காற்று வீசும் போது வீடுகளுக்கு மீண்டும் பறந்து வருகிறது. இதனால் பெரும் அவதியுறுகின்றனர்

நகராட்சி நிர்வாகம் ஆங்காங்கே உடனடியாக குப்பைத் தொட்டிகளை வைத்து மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வாகன ஓட்டிகள், அருகே உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில், உள்ள தனியார் பள்ளி அருகே குப்பைகள் சாலையோரம் கொட்டப்பட்டு கிடப்பதை படத்தில் காணலாம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.05.2026 - 08:42:01
Privacy-Data & cookie usage: