Get free training call for mushroom cultivation in Namakkal Indian Bank

இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன நாமக்கல் மைய இயக்குநர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள தகவல்:

நாமக்கல்லில் உள்ள இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் சார்பில் காளான் வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. காளான் உற்பத்தியை நவீன தொழில்நுட்ப முறையில், குறைவான முதலீட்டில் துவங்க அனைத்து விவரங்களும் இலவசமாக கற்றுத் தரப்படும்.

8ம் வகுப்பு வரை படித்த 18-க்கு மேல் 45 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு 35 பேர் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்தப் பயிற்சி 10 நாள்கள் நடைபெறும்.

பயிற்சி செலவு, பொருள்கள், உணவு இலவசமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இயக்குநர், இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம், ரவின் பிளாசா, திருச்சி சாலை, நாமக்கல்- 637001 என்ற முகவரிக்கு வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!