பெரம்பலூரில் சாலையோரம் பையில் வைக்கப்பட்ட பெண் குழந்தை மீட்பு: போலீசார் தீவிர விசாரணை!

schedule
2022-01-11 | 16:40h
update
2022-01-11 | 16:41h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Girl Child rescued from roadside bag in Perambalur: Police intensify probe

பெரம்பலூர் 4 ரோடு, ரெங்கம்மாள் நகர் பகுதியில் சாலையோரம் கிடந்த கட்டைப் பை ஒன்றை நாய்கள் கடித்து இழுத்து செல்ல முயன்ற போது, குழந்தை அழும் சத்தம் கேட்டு பொது மக்கள் ஓடிச்சென்று பையை பார்த்த போது அதில் பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் பெண் குழந்தை இருந்துள்ளது.

Advertisement

இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், பையில் கிடந்த பெண் குழந்தையை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

அந்த குழந்தை யாருடையது? எதற்கு அவர் விட்டு சென்றனர் என போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவு வைத்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 22:04:56
Privacy-Data & cookie usage: