சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்: கட்டட தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை : நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பு

schedule
2018-12-20 | 14:05h
update
2026-05-25 | 21:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Girl kidnapped and raped: building worker to 10 years in prison : Namakkal Court

திருமண ஆசை காட்டி சிறுமியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கட்டட தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள பீமநாயக்கனூரை சேர்ந்தவர் சரவணன் (வயது 32). கட்டட தொழிலாளி. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி நவலடிப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து அந்த சிறுமி எருமப்பட்டி போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பளிக்கப்ட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட சரவணனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்து நீதிபதி இளங்கோ உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞர் சுசீலா ஆஜரானார்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.05.2026 - 21:26:03
Privacy-Data & cookie usage: