பெரம்பலூர் அருகே மிரட்டலால் சிறுமி தற்கொலை விவகாரம்: உரிய நடவடிக்கை கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர், கலெக்டர் அலுவலகம் முற்றுகையிட்டு ஆர்பாட்டம்!

schedule
2022-11-17 | 09:01h
update
2022-11-17 | 09:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Girl’s suicide due to intimidation near Perambalur: Communist Party, demanding appropriate action, besieged the Collector’s office and protested!

பெரம்பலூர் மாவட்டம், கை.களத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், கடத்தி, கட்டாய திருமணம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவத்தில் தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம், வீரகனூரில் சிகிச்சை பெற்று சேலம் அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்கு அனுப்பியதில், அங்கு உயிரிழந்தார்.
இது குறித்து சேலம் மாவட்ட நீதிபதி, முன்னிலையில் சிறுமி தனது தற்கொலைக்கான காரணமானவர்கள் குறித்து வாக்குமூலம் அளித்தர். இது குறித்து மேலும், சேலம் மாவட்ட வருவாய் மற்றும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Advertisement

இந்நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம், சிறுமி அப்பகுதியை சேர்ந்த மணி என்ற இளைஞருடன் வீட்டை விட்டு வெளியேறிதாகவும், இது குறித்து அந்த சிறுமியின் தந்தை, கை.களத்தூர் காவல் நிலையத்தில், புகார் அளித்துள்ளார். இதில் சிறுமி மீட்கப்பட்டு பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், சிறுமியிடம், மணியின் உறவினர்களான ராமசாமி (52) மாரிமுத்து (27) இருவரும், கடந்த அக்டோபர் 25 அன்று, ஓடையில் துணி துவைத்து கொண்டு இருந்த பெண்ணிடம், மீண்டும் திருமணம் செய்து வைப்போம் என மிரட்டியதாகவும், அந்த பெண்ணின் வீடியோ எடுத்து வைத்து உள்ளதை வெளியிடுவோம் என மிரட்டியதாகவும், கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சிறுமி விசம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில், உயிரிழந்த சிறுமியை தற்கொலைக்கு தூண்டியவர்கள், கட்டாய திருமணம் செய்ய காரணமானவர்கள், உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது உரிய எடுக்க கோரி, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் ரமேஷ், டைஃபி மாநில பொறுப்பாளர் சிங்காரவேலன், அனைத்து இந்திய மாதர் சங்கத்தினர் கலையரசி, உள்ளிட்ட பல துணை அமைப்பினர் கலந்து கொண்டு இன்று காலை, பெரம்பலூர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர். கலெக்டரிடம் மனு கொடுக்க சென்ற போது போலீசாருக்கும், கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், அவர்கள் கலெக்டரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்க்கு இழப்பீடு வழங்கவும், முதல் அமைச்சர் மனு கொடுத்தனர். இந்த சம்பவத்தில், 4 பேரை கைது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 07:55:18
Privacy-Data & cookie usage: