கோகுல்ராஜ் கொலை வழக்கு வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு

schedule
2019-01-11 | 16:58h
update
2019-01-11 | 16:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Gokulraj murder case adjourned till 18th

கோகுல்ராஜ் கொலை வழக்கு வரும் 18 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் இன்ஜினியர் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பான விசாரணை, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது.

Advertisement

கோகுல்ராஜ் தாய் சித்ரா, அண்ணன் கலைச்செல்வன், கோகுல்ராஜ் கல்லூரி தோழி சுவாதி, அவரது தாய் செல்வி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.இந்த வழக்கு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கார் டிரைவர் அருண் உள்பட 15 பேர் கோர்ட்டில் ஆஜராகினர்.

தொடர்ந்து 2 வது நாளாக திருச்செங்கோடு கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது சம்பவம் தொடர்பாக போலீஸ் துறையால் கைது செய்யப்பட்ட 11 நபர்கள் மற்றும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மணிவண்ணன் அடையாளம் காட்டினார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 18 ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார். அன்று யுவராஜ் தரப்பு வக்கீல் கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணனிடம் குறுக்கு விசாரணை நடத்த வாய்ப்புள்ளது.

மேலும் அன்று அரசுத்தரப்பு சாட்சியான நாமக்கல் நல்லிப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்க்கு சம்மன்அனுப்பப்பட்டுள்ளது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் நல்லிப்பாளையம் பகுதியில் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கோர்ட்டில் சாட்சியம் அளிப்பார்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 06:49:06
Privacy-Data & cookie usage: