கோகுல்ராஜ் கொலை வழக்கு: ஜன., 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

schedule
2018-12-20 | 14:07h
update
2026-04-19 | 18:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Gokulraj murder case: Adjournment to Jan 5

நாமக்கல் : கோகுல்ராஜ் கொலை வழக்கு விசராணை ஜன., 5-ம் தேதி ஒத்தி வைத்து நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உத்திரவிடப்பட்டது.

Advertisement

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பான விசாரணை, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் கோகுல்ராஜ் தாயார் சித்ரா,பள்ளிபாளையம் காவிரி ஆர்எஸ் ரயில் நிலைய அலுவலர் கைலாஷ் சந்த் மீனா,கோகுல்ராஜ் சகோதரர் கலைச்செல்வன், கோகுல்ராஜ் கல்லுாரி தோழி சுவாதி என 40 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் ,அவரது கார் ஓட்டுநர் அருண் உள்பட 15பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். எனினும்,யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 5-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி இளவழகன் உத்திரவிட்டார்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 18:57:05
Privacy-Data & cookie usage: