பெரம்பலூர் அருகே காற்றோட்டத்திற்காக வீட்டின் வெளியே தூங்கிய பெண்ணிடம் நகை திருட்டு!

schedule
2019-05-28 | 08:45h
update
2019-05-28 | 08:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Gold Chain robbery when Woman Sleeping outside the house for ventilation near Perambalur

Advertisement

பெரம்பலூர் அருகே உள்ள நொச்சியம் கிராமத்தை சேர்ந்தவர் நைனாம்மாள் (வயது சுமார் 55), விவசாய தொழிலாளி, தற்போது கோடையின் வெப்பம் அதிகரித்த காரணத்தால் அனலாக கொதிக்கிறது காற்று, பூமி உள்ளிட்ட அனைத்து பொருட்களும். இந்நிலையில் நைனாம்மாள் நேற்றிரவு, வீட்டின் வெப்பம் தாங்க முடியாமல், வீட்டின் முன்புறத்தில் கட்டில் போட்டு தூங்கி கொண்டிருந்தார். அதிகாலையில் அப்பகுதியில் வந்த மர்மநபர்கள் கைவரிசை அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்கசங்கலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து நைனாம்மாள் கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2026 - 21:04:59
Privacy-Data & cookie usage: