ஸ்மார்ட் கார்டு வராதவர்களுக்கு அரசு அறிவுரை

schedule
2017-05-05 | 20:14h
update
2026-06-25 | 03:50h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Government advice to people who do not have smart ration cards || ஸ்மார்ட் ரேசன் கார்டு வராதவர்களுக்கு அரசு அறிவுரை

ரேஷன் கடைகளில் தற்போதுள்ள பேப்பர் குடும்ப அட்டைகளை மாற்றி மின்னணு குடும்ப அட்டைகளாக அச்சிட்டு வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

Advertisement

தமிழகத்தில் மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிடுதல் தொடர்பாக குடும்ப தலைவரின் புகைப்படம் இன்மை, பிறந்த தேதி இன்மை, முகவரியின்மை காரணங்களுக்காக ஆயிரக் கணக்கான குடும்ப அட்டைகள் அச்சிடப்படாமல் உள்ளது. இதுகுறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளில் ஒட்டி விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது.

எனவே புதிய மின்னணு குடும்ப அட்டை வரப்பெறாத குடும்ப அட்டைதாரர்கள் உடனடியாக தங்கள் நியாய விலைக்கடைக்கு சென்று உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடை விற்பனையாளரிடம் அளித்து புதிய மின்னணு அட்டை அச்சிட்டு வழங்க ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 03:50:29
Privacy-Data & cookie usage: