Government allows students to enroll in schools from tomorrow
பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்;
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் நாளை (ஆக.17) முதல் 2020 – 2021 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சேர்க்கை நடைபெறும்.
மேலும் நாளை முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழும், மாற்றுச் சான்றிதழும் வழங்கப்படும். மேல்நிலைப் பள்ளிகளில் மேல்நிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கை ஆக.24. முதல் நடைபெற உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டவுடன் அவர்களுக்குத் தேவையான புத்தகங்கள், குறிப்பேடுகள், புத்தகப் பை மற்றும் சீருடைகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளியுடன் மாணவர் சேர்க்கை நடைபெற உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்கை செய்து மாணவ, மாணவிகள் கல்வி கற்க வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.